காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-15 18:45 GMT

சிவகங்கை,

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பால்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது 2-வது மகள் பிரியங்கா (வயது 20). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் காரைக்குடியை அடுத்த ஆராவயலில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அங்கு தன்னுடன் பணிபுரிந்த மணிகண்டன் என்பவரை காதலித்தார். பின்னர் இருவரும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் காளையார்கோவிலை அடுத்த ஆவரங்குடி கிராமத்தில் வசித்து வந்தனர்.

தற்கொலை

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரியங்காவின் தாயார் வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தற்கொலை செய்து கொண்ட தனது மகளை, மணிகண்டன் மற்றும் அவரது தாயார் ஆகியோர் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்