விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை; ஈரோடு அருகே பரிதாபம்

ஈரோடு அருகே விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-23 20:20 GMT

சோலார்

ஈரோடு அருகே விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

ஈரோடு அருகே உள்ள சோலார் லக்காபுரம் ஊராட்சி கிழக்கு வீதியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவருடைய மகள் பொற்கொடி (வயது 20). இவர் நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்சி. வேதியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பொற்கொடி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் பெற்றோரிடம் தனக்கு விடுதியில் தங்கி படிக்க பிடிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் தனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஷம் குடித்தார்

அதற்கு பெற்றோர், இன்னும் 4 மாதங்கள்தானே கல்லூரி படிப்பு உள்ளது. எனவே படிப்பை முடித்துவிட்டு வா என அவருக்கு அறிவுரை கூறி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பொற்கொடி கடந்த 6-ந் தேதி மீண்டும் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டார். மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 16-ந் தேதி வீட்டில் விஷம் குடித்துவிட்டார் (எலி மருந்து). ஆனால் இதுபற்றி பெற்றோரிடம் அவர் கூறாமல் மறைத்துவிட்டார். இதற்கிடையே அவர் உடல்நிைல பாதிக்கப்பட்டது.

இறந்தார்

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பொற்கொடியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அப்போதுதான் பெற்றோருக்கு மகளின் உடல்நிலை பாதிப்பு தெரியவந்தது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மகளை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அப்போது டாக்டர்கள் கேட்டபோதுதான் பொற்கொடி தான் விஷம் குடித்துவிட்டதை கூறியுள்ளார். இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். எனினும் சிகிச்சை பலனின்றி பொற்கொடி இறந்துவிட்டார்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்