எருமப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

எருமப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை;

Update: 2022-11-05 18:45 GMT

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள செவிந்திபட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 58). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வீரப்பன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்