வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை

வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2022-10-27 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி வைரவபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). கொல்லங்காளி கோவில் அருகே பூ விற்பவர் தனுஜா. இவருடைய செல்போன் மற்றும் ரூ.600-ஐ வெங்கடேசன் திருடி செல்ல முயன்றார். இதனை கண்ட தனுஜா சத்தம் போட அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை பிடிக்க முயன்றனர். ஆனால் வெங்கடேசன் செல்போனையும், பணத்தையும் தூக்கி எறிந்துவிட்டு தப்பி சென்றார். இதற்கிடையே தனுஜாவும் அவரது உறவினர்களும் வெங்கடேசன் வீட்டுக்கு சென்று செல்போன் உடைந்து விட்டது இதனை ரிப்பேர் செய்து தர வேண்டும் இல்லையேல் போலீசில் புகார் கொடுப்போம் என்று கூறினர். இதனால் பயந்து போன வெங்கடேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்