நல்லம்பள்ளி அருகே இலங்கை அகதி தற்கொலை

Update: 2022-10-15 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தொப்பையாறு அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முகாம் அருகே உள்ள வனப்பகுதியில் மரம் ஒன்றில் முத்துராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதாக தொப்பூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கை அகதி முத்துராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை. இதையடுத்து முத்துராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்