பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதுமணி. இவருடைய தாய் பத்மாவதி (வயது 90). கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்மாவதி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லாத்துக்காடு காமராஜர் நகரில் வசித்து வரும் தனது மகள் செல்வி (51) வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை அவர் திடிரென வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி பத்மாவதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.