தொழிலாளி தற்கொலை
ஓசூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
ஓசூர்:
கிருஷ்ணகிரி தாலுகா சின்ன பத்தலகிரியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 26). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், அவர் கோபித்து கொண்டு, ஓசூர் வெங்கடேஷ் நகரில் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் தான் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.