பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை;

Update:2022-09-08 22:47 IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா (38). கணவன், மனைவி 2 பேரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பூ வியாபாரத்தில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்