தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
தர்மபுரி அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;
தர்மபுரி அருகே உள்ள கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 67). விவசாயி. இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.