தேன்கனிக்கோட்டையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தேன்கனிக்கோட்டையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-19 15:46 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மந்தேவூர் கிராமத்தை சேர்ந்தவர் காவேரியப்பா (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து செலவு செய்து வந்தார். இதனால் காவேரியப்பா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் அனுமந்தராயன் கோவில் அருகே விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்