விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-28 18:10 GMT

குடவாசல் அருகே உள்ள புளியேஞ்சேரி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் வேல்முருகன் (வயது24). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்று வந்தார். தற்போது வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்