வாலிபர் தற்கொலை

கம்பைநல்லூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-12 16:14 GMT

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள தேவ ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24). இவர் தனது நண்பர்களுடன் அரசம்பட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சென்னமூர்த்தி (30) என்பவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுபாஷ் உள்ளிட்ட 3 பேரிடமும் சென்னமூர்த்தி சாவு குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டுக்கு வந்த சுபாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசர்ர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்