மத்தூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மத்தூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மத்தூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் கிரிஜா (வயது16). இவர் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாணவி கிரிஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.