விவசாயி தற்கொலை

Update: 2023-10-20 19:16 GMT

ஓசூர்:

சூளகிரி தாலுகா குடிசாதனப்பள்ளியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 45). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மகன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ், நேற்று முன்தினம் ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்