குடும்ப தகராறில் பரிதாபம்பீர் பாட்டிலால் குத்திக்கொண்டு பெண் தற்கொலைகணவரிடம் போலீசார் விசாரணை

சேலத்தில் குடும்ப தகராறில் பீர் பாட்டிலால் கழுத்தில் தன்னைத்தானே குத்திக்கொண்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-11 20:21 GMT

சேலம்

சேலத்தில் குடும்ப தகராறில் பீர் பாட்டிலால் கழுத்தில் தன்னைத்தானே குத்திக்கொண்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறு

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (31). கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்று மாலை இருவருக்கும் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயலட்சுமி வீட்டில் இருந்த பீர் பாட்டிலால் கழுத்தில் குத்திக்கொண்டார். இதில் ரத்தம் பீறிட்டு அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாமாக இறந்தார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகராறு ஏற்பட்டு உள்ளது

இது குறித்து போலீசார் கூறும் போது இறந்து ஜெயலட்சுமி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே தர்மபுரியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி கணவன், மனைவி இருவரும் சீலநாயக்கன்பட்டி பகுதியில் வசித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக 5 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் சேலத்தில் தனியாக வசித்து வந்தார். அதே போன்று தமிழழகன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் ஜெயலட்சுமி, தமிழழகனை 2-வது திருமணம் செய்து கொண்டு தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். பெண் குழந்தைகள் இரண்டு பேரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பிள்ளைகளின் மதிப்பெண்கள் பற்றி கேட்டதில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனவேதனை அடைந்த ஜெயலட்சுமி பீர் பாட்டிலால் தன்னைத்தானே கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தமிழழகனிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்