ஓசூர்:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிகி தேய் (வயது 23). இவர் ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அசாமில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓசூர் வந்த பிகி தேய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.