சேலத்தில்கோர்ட்டு ஊழியர் தற்கொலை

Update: 2023-09-09 20:28 GMT

சேலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டியை சேர்ந்தவர் சுதந்திரராஜ் (வயது 50). இவர் சேலம் கோர்ட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் அஸ்தம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் வேலை பார்த்து வரும் ஊழியர்கள் சுதந்திரராஜ் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் ஊழியர்கள் நேற்று முன்தினம் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் சுதந்திரராஜ் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சுதந்திரராஜ் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்