தளியில்கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

Update: 2023-08-15 19:45 GMT

தேன்கனிக்கோட்டை

தளி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விரக்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மாருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தளபதி ராம்குமார். இவரது மகள் கிருத்திகா (வயது 20). இவர் வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து முதுகு தண்டுவடத்தில் அடிப்பட்டு ஆனைக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனிடையே மனரீதியான பாதிப்புக்கு ஆளான கிருத்திகா விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள போவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் கிருத்திகா அப்பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு சென்றார்.

போலீசார் விசாரணை

இதனிடையே நேற்று அதிகாலை எழுந்து வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே கிருத்திகாவின் காலணி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தேடிய போது கிருத்திகா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்