ராசிபுரம்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மாரிச்செல்வி (வயது 34). கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே வெள்ளக்கல் பட்டியில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாரிச்செல்வி நேற்று அதிகாலை சமையல் அறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.