நல்லம்பள்ளி அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

Update: 2023-07-13 19:30 GMT

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் செல்வம் இறந்த துக்கம் தாங்காமல் அவருடைய மனைவி சின்னவள் (வயது 47) மிகுந்த மன வேதனை அடைந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் தனது கணவரின் கல்லறைக்கு சென்றார். அங்கு கல்லறை அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது உறவினர்கள் சின்னவளை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னவள் உயிர் இழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் பெண், கணவரின் கல்லறையில் விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட சின்னவளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த தற்கொலை குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்