பொங்கலுக்கு தயாராகும் கரும்புகள்

நத்தம் பகுதியில் பொங்கலுக்கு கரும்புகள் தயாராக உள்ளன.;

Update: 2022-11-23 15:49 GMT

நத்தம் அருகே உள்ள சேர்வீடு, குட்டூர், சீரங்கம்பட்டி, காசம்பட்டி, வத்திபட்டி, அய்யனார்புரம், ஆவிச்சிட்டி உள்ளிட்ட இடங்களில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை குறி வைத்து, நத்தம் பகுதியில் கரும்பு சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. கரும்பு பயிரிட்டு, 10 மாதங்கள் கழித்து அறுவடை செய்யப்படுகிறது. தற்போது, பொங்கல் பண்டிகைக்கு கரும்புகள் தயார்நிலையில் உள்ளன. இங்கு அறுவடை செய்யப்படுகிற கரும்புகள் மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களுக்கு லாரிகள் முலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்