கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Update: 2022-12-05 19:38 GMT

திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெற்றியில் பட்டை, நாமம் இட்டு கோஷமிட்டனர்.

5 அம்ச கோரிக்கைகள்

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆருரான் சர்க்கரை ஆலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கடந்த 30-ந்தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கரும்பு விவசாயிகள் நெற்றியில் பட்டை, நாமம் இட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நாகமுருகேசன் தலைமை தாங்கினார்.

காத்திருப்பு போராட்டம்

இதில் மாநில செயலாளர்கள் தங்ககாசிநாதன், ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவார்க்காமல் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்