கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

Update: 2022-07-22 17:37 GMT


மூங்கில்துறைபட்டு,

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகளை அரவைக்காக மூங்கில்துறை பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1-க்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இவ்வாறு கரும்பு அனுப்பி வைத்த விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் இதுவரையில் பணம் வழங்கவில்லை. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஆலைக்கு கரும்புகள் வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு தவணை முறையில் அதற்கு உண்டான தொகையை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் 6 மாதங்களாகியும், இதுவரைக்கும் கரும்புக்கு உண்டான தொகையை வழங்கவில்லை. இதனால் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள், அதை திருப்பி கொடுக்க பணவசதி இல்லாமல் தவிக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் கரும்பு நிலுவை தொகையை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Tags:    

மேலும் செய்திகள்