அரியலூரில் திடீர் மழை

அரியலூரில் திடீர் மழை பெய்தது.;

Update: 2023-09-17 18:43 GMT

அரியலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். இந்தநிலையில் அரியலூரில் நேற்று மாலை சுமார் 4.10 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் சிறிது நேரத்தில் பெரிய அளவில் மழையாக 4.30 மணி வரை பெய்தது. திடீரென பெய்த மழையால் சாலையில் சென்றவர்கள் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக சாலையோரம் போடப்பட்டிருந்த தரைக்கடை வியாபாரிகளும், அங்கு பொருட்களை வாங்க வந்திருந்தவர்களும் அவதியடைந்தனர். அதன்பின்னர் இரவு 8.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்