மதுரையில் விபசாரம் நடந்த விடுதியில் திடீர் சோதனை-போலீசிடம் இருந்து தப்பிக்க இறங்கியபோது குழாய் உடைந்ததால் விழுந்த புரோக்கர் சாவு -போலீஸ்காரர் மகன் உள்பட 3 பேர் கைது

மதுரையில் விடுதியில் விபசார கும்பலை பிடிக்க சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குழாய் வழியாக புரோக்கர் இறங்கினார். அப்போது குழாய் உடைந்ததில் அவர் கீழே விழுந்து இறந்தார்.

Update: 2023-07-20 21:15 GMT


மதுரையில் விடுதியில் விபசார கும்பலை பிடிக்க சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குழாய் வழியாக புரோக்கர் இறங்கினார். அப்போது குழாய் உடைந்ததில் அவர் கீழே விழுந்து இறந்தார்.

விடுதியில் விபசாரம்

மதுரை மகபூப்பாளையம் டி.பி.மெயின் ரோட்டில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு விபசாரம் நடப்பதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். பின்னர், அந்த விடுதிக்குள் சோதனை நடத்த அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த மேற்குவங்காளம், கர்நாடகம், திருச்சி, திருப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 பெண்களை மீட்டனர்.

விசாரணையில் அவர்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக விடுதி மேலாளரான ரிசர்வ்லைனை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் டார்வின் (வயது 21), மகபூப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன், தல்லாகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த விக்னேஷ்பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

புரோக்கர் சாவு

இதற்கிடையில் அந்த விடுதிக்கு பின்னால் ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் சென்னை வடபழனி பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் (53) என்பதும், அவர்தான் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் என்றும் தெரியவந்தது.

போலீசார் விடுதிக்கு வருவதை அறிந்த அவர், தப்புவதற்காக மாடிக்கு சென்று குழாய் மூலம் கீழே இறங்க முயற்சித்து உள்ளார். அப்போது குழாய் உடைந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தது தெரியவந்தது. ஆனால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர் மீது சென்னையில் 8 விபசார வழக்குகளும், திருப்பரங்குன்றத்தில் ஒரு வழக்கும் இருப்பது தெரியவந்தது. இந்த விபசார வழக்கு தொடர்பாக பைரவமூர்த்தி, டேவிட் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்