உடன்குடியில் திடீர் விலை உயர்வு:வெற்றிலை கிலோ ரூ.285-க்கு விற்பனை

உடன்குடியில் திடீர் விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதால், வெற்றிலை கிலோ ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-08-27 18:45 GMT

உடன்குடி:

உடன்குடியில் சுமார் 40ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை உற்பத்தி நடந்தது. உடன்குடி மக்களின் தேவைக்கு போக மீதி வெற்றிலையை தமிழ்நாட்டில் பல ஊர்களில் விற்பனை செய்து வந்தனர். 'உடன்குடி வெற்றிலை'க்கு தனி மவுசு இருந்தது. தற்போது உடன்குடி பகுதியில் வெற்றிலை உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உடன்குடி பகுதிக்கு தற்போது ஆத்தூர், பெங்களுரு பகுதியிலிருந்து வெற்றிலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ வெற்றிலை கட்டு ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது, தற்போது கோவில் கொடை விழா, திருமணம் போன்ற பல்வேறு சுபமுகூர்த்த நாட்கள் நடைபெற்று வருவதால், வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த நிலையில் நேற்று ஒரு கிலோ வெற்றிலை ரூ285-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது கிலோவுக்கு ரூ.65 விலை உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்