தூத்துக்குடி அருகே மரங்களில் திடீர் தீ

தூத்துக்குடி அருகே மரங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.;

Update: 2023-08-03 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே ஸ்பிக் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஜிப்சம் யார்டு அருகே உள்ள முட்செடிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அந்த பகுதியில் உள்ள காய்ந்த மரங்களிலும் தீ பரவியது. தகவல் அறிந்த ஸ்பிக்நகர், தெர்மல்நகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் மரங்கள் கருகி சேதம் அடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்