ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில் திடீர் தீ
ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில் திடீர் தீ
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலையில் மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. இதில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமைகள், மான், சருகு மான், புள்ளிமான், மிளாமான் ஆகியவை அதிக அளவில் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ள பேய் மழை மொட்டை என்ற இடத்தில் நேற்று இரவு 8 மணிக்கு மின்னல் வெட்டியதன் காரணமாக திடீரென வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மளமளவென தீ பரவியது. இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு உள்ளன. தீயை அணைக்க அப்பகுதிக்கு வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் சென்றுள்ளனர்.