மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ

Update: 2023-07-31 19:50 GMT

மேட்டூர்

மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பணியாளர்கள் அங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இந்த குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்