பல்லாவரம் ரேடியல் சாலையில் பாலத்துக்கு அடியில் கேபிளில் திடீர் தீ விபத்து - கரும்புகை மூட்டத்தால் வாகன‌ ஓட்டிகள் அவதி

பல்லாவரம் ரேடியல் சாலையில் பாலத்துக்கு அடியில் கேபிளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை மூட்டத்தில் வாகன‌ ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2022-07-21 02:15 GMT

பல்லாவரம் ரேடியல் சாலையில் பாலத்துக்கு அடியில் கேபிளில் திடீர் தீ விபத்து - கரும்புகை மூட்டத்தால் வாகன‌ ஓட்டிகள் அவதிசென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் 200 அடி ரேடியல் சாலையில் பல்லாவரம் பெரிய ஏரிகளை இணைக்கும் சாலையின் அடியில் சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அடியில் செல்லும் மின்சார கேபிளில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பாலத்தின் அடியில் இருந்து குபு குபுவென கரும்புகை மூட்டம் விண்ணை நோக்கி பல அடி உயரத்துக்கு எழும்பியது.

இதனால் ரேடியல் சாலை முழுவதும் கரும்புகை மூட்டமாக காணப்பட்டதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதால் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் தீ விபத்து காரணமாக பாலத்தின் அடியில் உள்ள கேபிள் வயர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரும்புகை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த பகுதியில் பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், கேபிளில் எரிந்த தீயை அணைத்தனர். இதனால் கரும்புகை மூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் ரேடியல் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்