மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.;

Update: 2023-10-06 14:35 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மின்வாரிய துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பொறி ஏற்பட்டது. அந்த தீப்பொறி தரையில் விழுந்து காய்ந்து போன புற்கள் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்த புற்கள் மீது மின் வாரிய ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதால் மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். நேற்று மதியமும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

துணை மின் நிலையத்தில் முறையான பராமரிப்பு பணிகள் செய்யாததால், இது போன்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே துணை மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்