சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் 'தீ'

ராசிபுரம் அருகே சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.;

Update: 2023-04-12 18:57 GMT

ராசிபுரம்

சோபா தயாரிக்கும் நிறுவனம்

ராசிபுரம் அருகே உள்ள குட்டலாடம்பட்டி ஊராட்சி மலையாம்பாளையம் பகுதியில் சோபா தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முரளிகணேஷ் (வயது 49) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சோபா தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக தகர செட் அமைக்கும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதைபார்த்த வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.

பொருட்கள் சேதம்

இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் மற்றும் சேலத்தை சேர்ந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அங்கு இருந்த சோபாக்கள், பஞ்சு போன்ற பொருட்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்