தேங்காய் நார் தொழிற்சாலையில் திடீர் 'தீ'

எருமப்பட்டி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் திடீர் தீப்பிடித்தது.;

Update: 2023-09-10 18:45 GMT

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டியை சேர்ந்தவர் ரவி. இவர் எருமப்பட்டியில் இருந்து முட்டாஞ்செட்டி செல்லும் சாலையில் தேங்காய் நார் தொழிற்சாலை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்தவர்களின் உதவியோடு உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் தேங்காய் மட்டைகளை தீ பிடிக்காமல் அகற்றினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சேதம் சுமார் ரூ.3 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேங்காய் நார் தொழிற்சாலையில் மின்கசிவால் தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்