சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார்.
நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜாபர் (வயது 59). இவர் நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இறந்த ஜாபர் உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.