சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது.

Update: 2023-05-09 19:21 GMT

திருச்சி, தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மற்றும் சித்திரை மாத மூல நட்சத்திர வைபவம் நேற்று நடந்தது. இதனையொட்டி காலையில் சுதர்சன ஹோமம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக கோ பூஜையும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. பின்னர் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்