சுடலைமாட சாமி கோவில் விழா: பக்தர்களுக்கு கறி விருந்து

சுடலைமாட சாமி கோவில் விழாவில் பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.;

Update:2023-10-15 00:45 IST

சாயல்குடி

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வெட்டுக்காடு கிராமத்தில் முத்துப்பேச்சி அம்மன், சுடலை மாடசாமி, காட்டேறும்பெருமாள் சாமி கோவில் உள்ளது.

இந்த கோவில் விழாவையொட்டி கறி விருந்து படைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று காலையில் பக்தர்கள் கடற்கரை சென்று புனித நீர் எடுத்து வந்தனர்.

பின்னர் சுவாமிகளுக்கு புனித நீர் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

விழாவில் வெட்டுக்காடு, நரிப்பையூர், கன்னிராஜபுரம், சாயல்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பள்ளக்குறிச்சியார் வகையரா இளைஞர்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்