தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவர் தற்கொலை

தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2022-08-09 17:15 GMT

பரமக்குடி, 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமத்தை சேர்ந்தவர் காயாம்பு. இவரது மகன் கோபி கண்ணன்(வயது 16). இவர் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவ்வப்போது கோபி கிருஷ்ணன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். அதை அவரது தந்தை கண்டித்து உள்ளார். இதனால் மனம் உடைந்த கோபி கிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்