கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி
பாளையங்கோட்டையில் கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலியானார்.;
பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் காசிராஜன். இவர் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் மனோஜ் டேவிட் (வயது 23). நேற்று இரவு மனோஜ் டேவிட் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் சாலையை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.