தள்ளுவண்டி கடைக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் - வெளியான வீடியோ...!
தாம்பரத்தில் தள்ளுவண்டி கடைக்காரர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.;
சென்னை,
சென்னையை அடுத்த தாம்பரத்தில் தள்ளுவண்டி கடைக்காரர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தாம்பரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள குமார், லஞ்சம் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இதனிடையே தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைக்காரர் ஒருவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்குவதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார்.
இந்த காட்சிகள் இப்போது இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.