மயான பாதை அமைப்பது குறித்து சப்- கலெக்டர் ஆய்வு
தென்மாம்பாக்கத்தில் மயான பாதை அமைப்பது குறித்து சப்- கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.;
பனப்பாக்கம் அடுத்த தென்மாம்பாக்கம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். அப்பகுதியில் நீண்ட காலமாக மயான பாதை இல்லாமல் இறந்தவர்களின் உடலை வயல்வெளி வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மயான பாதை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்பேரில் நேற்று அரக்கோணம் சப்-கலெக்டர் பாத்திமா மயான பாதை அமைப்பதற்கான இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும் இப்பணியை விரைந்து முடிக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நெமிலி தாசில்தார் பாலசந்தர், மண்டல துணை தாசில்தார் சத்யா, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சுவேதா ஆகியோர் உடனிருந்தனர்.