பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஆய்வு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பழவேற்காட்டில் மீனவர்களுக்கான நிரந்தர முகத்துவாரம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.