கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு;

Update: 2023-05-25 19:07 GMT

ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாருவதற்கு தஞ்சை மாவட்டத்தில் 189 பணிகள் 1,068.45 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூர்வாரும் பணிகளை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் ஒரத்தநாடு ஒன்றியம் பருத்திக்கோட்டை கிராமத்தில் உள்ள மேலவன்னிப்பட்டு பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கல்லணைக்கால்வாய் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், இளங்கண்ணன், உதவிப்பொறியாளர் அறிவரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்