கிராம உதவியாளர் பணி எழுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

கிராம உதவியாளர் பணி எழுத்து தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-12-01 13:37 GMT

திருவண்ணாமலையில் 4-ந்தேதி நடைபெறவுள்ள கிராம உதவியாளர் பணி எழுத்து தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார்.

இதில் தாசில்தார் சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாப்ஜான், தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார்கள் மணிகண்டன், கலையரசி, தேர்தல் துணை தாசில்தார் பொன்விழி, வருவாய் ஆய்வாளர்கள் சுதா, தீபன், சக்கரவர்த்தி, சிவராஜ், அமுதா, தேர்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரூபா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், எழுத்து தேர்வுக்கு கருப்பு பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்த வேண்டும். அனுமதிசீட்டு மற்றும் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை தவிர வேறு எதையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கக்கூடாது. செல்போன், புத்தகங்கள், பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்துக்கு கொண்டுவந்தால் அனுமதிக்கக்கூடாது என உதவி கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை தாலுகாவில் 10 கிராம உதவியாளர் காலி பணியிடத்திற்கு 2,480 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 39 விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. 2,441 விண்ணப்பம் தகுதியானவை. அருணை பொறியியல் கல்லூரி தேர்வு மையத்தில் எழுத்துத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிவரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் மிதிவண்டி ஓட்டும் திறன் பரிசோதிக்கும் தேர்வு நடைபெறவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்