வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.;
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்), சாலை பணிகள், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராமியம்),
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட இலக்கு விகிதாசாரம் மீதான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர் நிலையிலான அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.