தூத்துக்குடியில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் குறித்து ஆய்வு கூட்டம்

தூத்துக்குடியில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.;

Update: 2023-09-21 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கல்வி நிதி வசூல், வட்டியில்லா கடன் வசூல் மற்றும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் கூடுதல் பதிவாளரும், செயலாட்சியருமான கோ.க.மாதவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் லாபத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வசூல் செய்யப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி தொகை ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 98, கல்வி நிதி ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 399 உள்பட மொத்தம் ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 498-க்கான காசோலையை தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முத்துகுமாரசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இனணப்பதிவாளரும், செயலாட்சியருமான பொ.நடுக்காட்டுராஜா, தூத்துக்குடி சரகத் துணை பதிவாளர் போ.ரவீந்திரன் மற்றும் திருச்செந்தூர் சரக துணைப்பதிவாளர் கோ.சந்திரா, கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் நா.சு.மணி, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் அ. சாம்டேனியல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்