சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனா்
சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனா்;
காரைக்குடி
கோடைக்காலம் தொடங்கியதால் தற்போது மாவட்டம் முழுவதும் சாலையோரத்தில் குளிர்பான கடைகள் அதிகமாக வந்துள்ளன. இதையடுத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிராபவதி தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முத்துக்குமார் (காரைக்குடி), தியாகராஜன் (சாக்கோட்டை) ஆகியோர் காரைக்குடியில் புதிய பஸ் நிலையம், 100 மற்றும் 120 அடி சாலை, கல்லூரி சாலை, ரெயில்வே ரோடு, கோட்டையூர் ரோடு மற்றும் பர்மா காலனி ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் விற்பனை செய்யப்படும் பதநீர், கேழ்வரகு கூல், சோடா சர்பத் ஆகிய கடைகளிலும் மளிகை மற்றும் இறைச்சி கடைகளிலும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதில் சான்றிதழ் பெறாத 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.