மாணவர்கள், இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உதவ வேண்டும் - கமல்ஹாசன்

மாணவர்கள், இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உதவ வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2022-11-10 07:37 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை, தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்த முகாம்கள் வரும் நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. 18 வயது பூர்த்தியடைந்த பிறகும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பவர்கள் இந்த முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது, வாக்களிக்கத் தகுதிவாய்ந்த மாணவர்கள், இளைஞர்களின் பெயர்களைப் பட்டியலில் சேர்க்க உதவுவது, விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் முழுமையாகப் பங்கேற்கும்போதுதான் ஜனநாயகம் அர்த்தம் பெறுகிறது. வாக்குரிமையின் வலிமையை உணர்ந்துகொள்வது அனைவரின் உரிமையும் கடமையும் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்