வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி டாக்டராக பணிபுரிய அனுமதிக்கவேண்டும் - மக்கள் நீதி மய்யம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.;

Update:2022-10-15 22:24 IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ளிருப்பு பயிற்சி டாக்டர்களாக சேர தமிழக அரசு ஆணை பிறப்பிக்காததால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பல்வேறு நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்கள் இல்லை என்பதே நிதர்சனம். தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் தலையிட்டு, வெளிநாடுகளில் பயின்ற மருத்துவ மாணவர்கள், அரசு மருத்துவக்கல்லூரிகளில் உடனடியாக உள்ளிருப்பு பயிற்சி டாக்டராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். குறிப்பாக, ரூ.2 லட்சம் கட்டண ரத்து தொடர்பான அரசாணையை விரைவில் வெளியிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்