மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட கிளை சார்பில் சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளைச்செயலாளர் கீர்த்தி வாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதில் மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்க மறுத்து மவுனமாக இருக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சிலர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.