போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பரிதவிப்பு

நிலக்கோட்டை-திண்டுக்கல் இடையே போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பரிதவித்தனர்.;

Update: 2023-07-31 15:44 GMT

நிலக்கோட்டை-திண்டுக்கல் இடையே அரசு பஸ் சரிவர இயக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதன் காரணமாக நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்லும் மாணவ-மாணவிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று காலை 6.30, 6.40, 6.50 ஆகிய நேரங்களில் வரக்கூடிய அரசு பஸ் வரவில்லை. காலை 6.30 மணியில் இருந்து 7.15 மணி வரை பஸ்நிலையத்தில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் காத்திருந்தனர். காலை 7.15 மணிக்கு தான் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் முண்டியடித்து பொதுமக்கள் ஏறினர். டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை காரணமாக காலை நேரத்தில் பஸ்களை இயக்க முடியவில்லை என்று போக்குவரத்து துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதேநிலை தொடர்ந்து நீடிப்பதால் மாணவ-மாணவிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே நிலக்கோட்டை-திண்டுக்கல் இடையே உரிய நேரத்தில் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்